Home சினிமா பாலிவுட் நடிகருடன் காதலில் நடிகை ஸ்ரீலீலா.. உறவை உறுதி செய்த நடிகரின் தாய்?

பாலிவுட் நடிகருடன் காதலில் நடிகை ஸ்ரீலீலா.. உறவை உறுதி செய்த நடிகரின் தாய்?

0

ஸ்ரீலீலா

தென்னிந்திய சினிமாவில் சென்சேஷனல் நடிகையாக கலக்கிக்கொண்டிருப்பவர் ஸ்ரீலீலா. சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் மூலம் தமிழிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். நடிப்பை தாண்டி இவருடைய நடனத்திற்கு பல லட்சம் ரசிகர்கள் உள்ளனர்.

இதுவரை தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகை ஸ்ரீலீலா தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். ஆம், கார்த்திக் ஆர்யன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீலீலா நடித்து வருகிறார்.

பாலிவுட் நடிகருடன் காதல்?

இந்த நிலையில், பாலிவுட் சென்றுள்ள நடிகை ஸ்ரீலீலா, அங்கு நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக ஊடங்ககளில் பேசப்பட்டு வருகிறது. அவர் வேறு யாருமில்லை படத்தின் ஹீரோ கார்த்திக் ஆர்யன் தான்.

திருமண உடையை மாற்றிய நடிகை சமந்தா நிச்சயதார்த்த மோதிரத்தை எப்படி மாற்றியுள்ளார் பாருங்க..

பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் இருப்பவர் கார்த்திக் ஆர்யன். இவர் தன்னை சிங்கிள் என சொல்லிக்கொண்டாலும், பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட கார்த்திக் ஆர்யனின் தாய் மாலா தனக்கு வரப்போகும் மருமகள் எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து பேசியுள்ளார்.

இதில் “குடும்பத்தின் தேவை என்னவென்றால், அவள் ஒரு நல்ல டாக்டராக இருக்க வேண்டும்” என கூறியுள்ளார். இதன்மூலம் அவர் கார்த்திக் ஆர்யன் – ஸ்ரீலீலா உறவை உறுதி செய்துள்ளார் என கூறி வருகிறார்கள். ஏனென்றால் நடிகை ஸ்ரீலீலா எம்பிபிஎஸ் முடித்துள்ளார்.

மேலும், நடிகை ஸ்ரீலீலா சமீபத்தில் கார்த்திக் ஆர்யனின் வீட்டில் நடந்த ஒரு குடும்ப நிகழ்வில் கலந்துகொண்டாராம். அதில் மிக நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர்.

அதில் ஸ்ரீலீலாவும் கலந்துகொண்டது இவர்களின் உறவை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது என சொல்லப்படுகிறது. கார்த்திக் ஆர்யனை விட ஸ்ரீலீலா 11 வயது இளையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Like This Video

NO COMMENTS

Exit mobile version