Home இலங்கை பொருளாதாரம் இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி – பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை

இலங்கைக்கு காத்திருக்கும் நெருக்கடி – பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை

0

நாட்டில் வங்கிக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் குறைவாக இருக்கும் நேரத்தில், கட்டுப்பாடு இல்லாமல் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டால், மீண்டும் அந்நிய செலாவணி நெருக்கடி ஏற்படக்கூடும் என்று பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

நாட்டின் வர்த்தக சமநிலையை நேர்மறையான மதிப்பில் பராமரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கான வரி சதவீதத்தை அரசாங்கம் சமீபத்தில் சிறப்பு வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அறிவித்தது.

அந்நியச் செலாவணி

இதன் மூலம் 5 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதிகள் முறையாக ஒழுங்குபடுத்தப்படாவிட்டால், நாட்டில் மீண்டும் அந்நியச் செலாவணி நெருக்கடி ஏற்படக்கூடும் என்று, பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையின் சிரேஷ் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version