Home இலங்கை அரசியல் வரவு-செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை …! எவ்வளவு தெரியுமா

வரவு-செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகை …! எவ்வளவு தெரியுமா

0

2026 வரவு – செலவுத் திட்டத்தில் அரசாங்கத்தின் மொத்த வருவாய் ரூ.5,300 பில்லியனாகவும் மொத்தச் செலவு ரூ.7.057 பில்லியனாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரவு – செலவு திட்ட பற்றாக்குறை 1,757 பில்லியனாக உள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு-செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

இறுதி வாக்கெடுப்பு

வரவு-செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம்
இன்று ஆரம்பமாகி நவம்பர் 14 ஆம் திகதி வரை தொடரும்.

இரண்டாம்
வாசிப்பு வாக்கெடுப்பு நவம்பர் 14 ஆம் திகதி மாலை 6:00 மணிக்கு
நடைபெறவுள்ளது.

அதன்பின் வரவு – செலவுத் திட்டம் மீதான மூன்றாம் வாசிப்பு அல்லது
குழுநிலை விவாதம் நவம்பர் 15 முதல் டிசம்பர் 05 வரை நடைபெறும்.

மேலும் வரவு-செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 05 ஆம்
திகதி மாலை 6:00 மணிக்கு
நடைபெறவுள்ளது.

You may like this

https://www.youtube.com/embed/mU7Yj2dd3s8

NO COMMENTS

Exit mobile version