Home இலங்கை கல்வி உயர்தரப் பரீட்சை வினாத்தாள் பாதுகாப்பில் ஏற்பட்ட குழப்பம்..! பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் பாதுகாப்பில் ஏற்பட்ட குழப்பம்..! பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவிப்பு

0

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் இன்று (14) நடைபெறவுள்ள பாடத்திற்கான வினாத்தாள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கசியவில்லை என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

எனவே, பரீட்சார்த்திகள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் எனவும், திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பௌதிகவியல் முதலாம் வினாத்தாள்

இந்நிலையில், அம்பாந்தோட்டை மாவட்டம் அம்பாலாந்தோட்டையில் உள்ள உயர்தரப் பரீட்சை ஒருங்கிணைப்பு நிலையமொன்றில், இன்று நடைபெறவுள்ள பௌதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 6 பொதிகள் தவறுதலாக வேறு வினாத்தாள் பொதிகளுடன் வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நேற்று(13) நடைபெற்ற இசை, நடனம் மற்றும் விவசாய அறிவியல் ஆகிய பாடங்களுக்கான வினாத்தாள் பொதிகள் அடங்கிய பெட்டியிலிருந்தே, இன்று(14) பௌதிகவியல் முதலாம் வினாத்தாள் அடங்கிய 6 பொதிகள் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த வினாத்தாள் பொதிகள் திறக்கப்படவோ அல்லது வெளிப்படுத்தப்படவோ இல்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி முன்னதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

உடனடி விசாரணை

இந்தச் சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மேலும், குறித்த வினாத்தாள்கள் பாதுகாப்பாக முத்திரையிடப்பட்டுள்ளதால், பரீட்சார்த்திகள் தேவையற்ற விதத்தில் அச்சம் கொள்ள வேண்டாம் என பரீட்சைகள் திணைக்களம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

தற்போது கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/sri-lanka-a-l-exam-paper-leak-rumours-denied-1786669426

NO COMMENTS

Exit mobile version