Home இலங்கை அரசியல் இலங்கை மக்களுக்காக இந்தியாவுடன் கைகோர்க்கும் அநுர அரசு

இலங்கை மக்களுக்காக இந்தியாவுடன் கைகோர்க்கும் அநுர அரசு

0

இலங்கை (sri lanka)மக்களுக்கு வினைத்திறனான அரசாங்க சேவைகளை வழங்குவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை விரைவுபடுத்துவதற்கு இலங்கையும் இந்தியாவும்(india) இணைந்து செயற்படும் என்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் அடுத்த மாதம் கைச்சாத்திடப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath) அண்மையில் தெரிவித்தார்.

இந்தியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இந்தியாவில் வெற்றிகரமான மக்களை மையப்படுத்திய டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் ஆர்வமாக உள்ளதாகவும், டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு இந்தியா ஆதரவளிக்க தயாராக இருப்பதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்ததாகவும் அமைச்சர் கூறினார்.

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் 

பயனாளிகளுக்கு பணம் செலுத்துதல் உட்பட ஏனைய அரச சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் இலங்கை மக்களுக்கு உதவும் என்றும் ஹேரத் குறிப்பிட்டார்.

டிஜிட்டல் அடையாள அட்டையினால் பயனாளிகள் நேரடியாக பணம் செலுத்த முடியும் எனவும், இடைத்தரகர் தேவையில்லை எனவும் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் ஆதார் அட்டையைப் போலவே டிஜிட்டல் ஐடியும் இருக்கும் என்றும், மோசடி மற்றும் ஊழல் வாய்ப்புகளை குறைக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

பொதுச் சேவையை டிஜிட்டல் மயமாக்குவதில் இந்தியா அதிக வெற்றி பெற்றுள்ளதாகவும், அது உலக நாடுகளின் பாராட்டைப் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

NO COMMENTS

Exit mobile version