Home இலங்கை அரசியல் இலங்கை – இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு! அமைச்சர் விஜித உறுதி

இலங்கை – இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு! அமைச்சர் விஜித உறுதி

0

இலங்கை – இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு
விரைவில் தீர்வு காண்போம் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) உறுதியளித்துள்ளார். 

தீர்வு..

இது தொடர்பில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த அரசு போல் இலங்கை – இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை வைத்து அரசியல்
ஆதாயம் தேட எமது அரசு முயலாது. இரு நாட்டு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கும்
விரைவில் தீர்வு காண்போம்.

கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய அரசுடன் ஏற்கனவே
பேசிவிட்டோம். தொடர்ந்தும் பேசுவோம்.

இரு நாட்டு கடற்றொழிலாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தீர்வு காண்போம் என குறிப்பிட்டுள்ளார்.

 

NO COMMENTS

Exit mobile version