Home விளையாட்டு இங்கிலாந்துக்கு செல்லவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி: புதிய துடுப்பாட்ட பயிற்சியாளர் நியமனம்

இங்கிலாந்துக்கு செல்லவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி: புதிய துடுப்பாட்ட பயிற்சியாளர் நியமனம்

0

இம்மாதம் இங்கிலாந்துக்கு(UK) மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட சுற்றுப்பயணத்திற்கு செல்லலவுள்ள இலங்கை(Srilanka) கிரிக்கெட் அணிக்கு துடுப்பாட்டப் பயிற்சியாளராக இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் இயன் பெல்(Ian Bell) நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத் தொடரில் இலங்கை அணி முதலில் 4 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் பங்கேற்கின்றது.

டெஸ்ட் போட்டி

பின்னர், இத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஓகஸ்ட் 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை மென்சஸ்டரில் இடம்பெறவுள்ளது.

2ஆவது போட்டி எதிர்வரும் 29ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி வரை லண்டன் லோட்ஸ் மைதானத்தில் இடம்பெறள்ளது.

மேலும் 3ஆவதும் இறுதியுமான போட்டி எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை லண்டன் கியா ஓவல் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

42 வயதான பெல், 2004 மற்றும் 2015 க்கு இடையில் இங்கிலாந்துக்காக 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இயன் பெல்

இதுதொடர்பாக இலங்கை கிரிக்கெட்டின் CEO ஆஷ்லே டி சில்வா கூறுகையில், “இங்கிலாந்தில் நிலைமைகள் குறித்த முக்கிய நுண்ணறிவுகளுடன் வீரர்களுக்கு உதவ, உள்ளூர் விவரம் அறிந்த ஒருவரைக் கொண்டுவர இயானை நியமித்தோம்.

இயானுக்கு இங்கிலாந்தில் விளையாடிய அனுபவம் அதிகம், மேலும் அவரது உள்ளீடுகள் இந்த முக்கியமான சுற்றுப்பயணத்தில் எங்கள் அணிக்கு உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.

இயான் பெல் (Ian Bell) இங்கிலாந்து அணிக்காக 118 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 7,727 ஓட்டங்கள் குவித்திருக்கிறார். அதில் 22 சதங்கள், 46 அரைசதங்கள் அடங்கும்.

NO COMMENTS

Exit mobile version