Home சினிமா நடிகர் விஜய்யை இயக்கும் வாய்ப்பை இழந்தேன்.. காரணத்தை கூறிய இயக்குநர் அஜய் ஞானமுத்து

நடிகர் விஜய்யை இயக்கும் வாய்ப்பை இழந்தேன்.. காரணத்தை கூறிய இயக்குநர் அஜய் ஞானமுத்து

0

அஜய் ஞானமுத்து

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் இயக்குநர் அஜய் ஞானமுத்து. இவர் டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.

தற்போது, இவர் இயக்கத்தில் டிமான்டி காலனி இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இந்த படம்
ஆகஸ்ட் – 15 அதாவது நாளை ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் கதாநாயகனாக அருள்நிதி நடித்துள்ளார். மேலும், இந்தப் படத்தில் அருள்நிதியுடன் அருண்பாண்டியன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தின் புரோமோசனுக்காக இயக்குனர் அஜய் ஞானமுத்து பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அப்போது ஒரு பேட்டியில் நடிகர் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் நான் உதவி இயக்குநராக இருந்தேன், அப்போது நானும் விஜய் சாரும் நன்றாக பழக ஆரம்பித்துவிட்டோம்.

விஜய்யை இயக்கும் வாய்ப்பு

நான் டிமாண்டி காலனி படத்தை இயக்கி முடித்த பிறகு விஜய் சாரை சந்தித்தேன். அவர் படம் ஹிட் ஆமே என்று கூறி வாழ்த்துக்களை சொன்னார். பின்பு என் படத்தை பார்த்து விட்டு படம் நல்ல இருக்கு, வேறு கதை இருந்தா சொல்லு அஜய் நாம படம் பண்ணலாம் என்று சொன்னார்.

அதற்காக, மூன்று மாதங்கள் செலவு செய்து ஒரு கதையை உருவாக்கிக்கொண்டு அவரிடம் சென்றேன். ஆனால் என்னால் அவரிடம் சரியாக கதை சொல்ல முடியவில்லை.

GOAT படத்தின் கதை இதுதான்.. இயக்குனர் வெங்கட் பிரபுவே சொல்லிட்டாரு

அதற்கு முக்கிய காரணம் எனக்கு இருந்த பயம் தான். நான் விஜய் சாரின் தீவிரமான ரசிகன் என்பதால் என்னால் அவரிடம் சரியாக கவனம் செலுத்தி கதையை கூற முடியவில்லை என்று இயக்குநர் அஜய் ஞானமுத்து கூறியுள்ளார்.

இதன்பின் இமைக்கா நொடிகள் படத்தை பார்த்துவிட்டு மீண்டும் படம் பண்ணலாம் கதை இருந்தால் சொல்லு என்று விஜய் சார் என்னிடம் கூறினார். அதே போல் மீண்டும் கதை கூற சென்றார், ஆனாலும் கூட என்னால் அந்த கதையை அவரிடம் சரியாக சொல்ல முடியவில்லை. இதனால் இரண்டு முறை அவரை இயக்கும் வாய்ப்பை நாம் இழந்தேன் என அஜய் ஞானமுத்து அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version