Home இலங்கை அரசியல் வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடுகளை முறையாக பயன்படுத்தாத அதிகாரிகள்

வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடுகளை முறையாக பயன்படுத்தாத அதிகாரிகள்

0

நடப்பு ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட நிதியொதுக்கீட்டில் ஐந்தில் ஒரு பங்கு கூட உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை என்று தெரிய வந்துள்ளது.

அரசாங்கத்தினால் 2025ம் ஆண்டுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக அபிவிருத்தி மற்றும் அரசாங்க செயற்பாடுகளுக்கான நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அதிருப்தி

எனினும் குறித்த ஒதுக்கீட்டில் இருந்து இதுவரையான காலப்பகுதிக்குள் 20 வீதமான நிதியொதுக்கீடுகள் கூட உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

முன்னைய காலங்களில் அரசாங்க அதிகாரிகள் மேற்கொண்ட செயற்பாடுகளுக்கு எதிரான விசாரணைகளின் காரணமாக நிர்வாகம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான எந்தவொரு செயற்பாட்டையும் மேற்கொள்ள அதிகாரிகள் மட்டத்தில் தயக்கம் ஏற்பட்டுள்ளமையே அதற்கான காரணம் என்று கூறப்படுகின்றது.

இது தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தனது அதிருப்தியை வெளிக்காட்டி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

NO COMMENTS

Exit mobile version