உழைக்கும் போது செலுத்தும் வரியைக் (PAYE Tax) குறைக்கும் பிரேரணை எதிர்வரும் வரவு செலவு திட்ட பிரேரணையில் உள்ளடக்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான பிரேரணையை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) சமர்ப்பித்து அதற்கான இணக்கத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
குறித்த பிரேரணையின் படி, தற்போது ஒவ்வொரு சம்பள விகிதத்திலிருந்தும் வசூலிக்கப்படும் வரிகள் பின்வருமாறு குறைக்கப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
வரிக்குறைப்பு
அதன்படி,150,000 ரூபாவுக்கு தற்போது செலுத்தப்படும் 3,000 ரூபா வரி 500 ரூபாவால் குறைக்கப்பட்டு 2,500 ரூபாவாக வசூலிக்கப்படும்.
அதேபோல், 300,000 ரூபாவுக்கு தற்போது செலுத்தப்படும் 7,000 ரூபா வரி 3,500 ரூபா குறைக்கப்பட்டு 3500 ரூபாவாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.