Home முக்கியச் செய்திகள் இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு விடுதலைப் புலிகளும் காரணம்: பழிபோடும் ரணில் விக்ரமசிங்க!

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு விடுதலைப் புலிகளும் காரணம்: பழிபோடும் ரணில் விக்ரமசிங்க!

0

கடந்த 2001 ஆம் ஆண்டு பொருளாதார மையங்கள் மீதான தாக்குதல்களால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக விடுதலைப் புலிகள் அமைப்புடன் போர் நிறுத்த உடன்படிக்கையை மேற்கொள்ள நேர்ந்ததாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அதல் பிஹாரி வாஜ்பாயிக்காக நேற்று (27.12.2024) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 7ஆவது அதல் பிஹாரி வாஜ்பாய் விரிவுரையில் கலந்து கொண்ட போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “2001ஆம் ஆண்டு டிசம்பரில் நான் இரண்டாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ​​இலங்கை கடுமையான அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டது. 

போர் நிறுத்தம்

இலங்கை இராணுவம் பின்வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதுடன் பல இடங்களில் விடுதலைப் புலிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது.

துறைமுகம் மற்றும் விமான நிலையம் மீதான தாக்குதல்கள் காரணமாக இலங்கைக்கான பொருட்கள் மற்றும் விமானங்களின் வருகை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தத்தை எட்டுவதுதான் ஒரே வழியாக காணப்பட்டது” என அவர் தெரிவித்துள்ளார்.    

you may like this…!


https://www.youtube.com/embed/Ehp_gpmE_r4

NO COMMENTS

Exit mobile version