Home இலங்கை பொருளாதாரம் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்:

எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்: மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்:

0

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 355 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 லீற்றர் பெட்ரோலின் விலை மாற்றமின்றி 420 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் விலை

ஒரு லீற்றர் டீசலின் விலை 16 ரூபாவினால் குறைந்துள்ளதுடன் அதன் புதிய விலை 317 ரூபாவாகும்.

அத்துடன், சிலோன் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலையில் மாற்றமின்றி தொடர்ந்தும் அதன் விலை 377 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் விலை 13 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 202 ரூபாவாகும்.

முதலாம் இணைப்பு

எரிபொருள் விலையில் இன்று (31) நள்ளிரவு முதல் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் விலைத் திருத்தம்

குறிப்பாக எரிபொருளின் விலை குறைக்கப்படலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதேவேளை மாதாந்த எரிபொருள் விலை திருத்தம் இன்று 31ஆம் திகதி நள்ளிரவு மேற்கொள்ளப்படவுள்ளதாக பெட்ரோலியம் பிரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு (US dollar) நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு வலுவடைந்து வருவதால் எரிபொருள் விலை குறைவடையும் என சங்கம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, இறுதி எரிபொருள் விலைத் திருத்தம் கடந்த மாதம் 30ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version