Home இலங்கை அரசியல் அநுர அரசாங்கத்திலுள்ள பிரதியமைச்சர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்

அநுர அரசாங்கத்திலுள்ள பிரதியமைச்சர் வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்

0

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்ன மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அரசாங்கத்திற்கு இது தொடர்பில் எந்தவித தகவலையும் தெரிவிக்காமல் நாட்டை விட்டு, வெளியேறியுள்ளதாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒலிம்பிக் பதக்கம் வென்ற மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய இரண்டு திறமையான விளையாட்டு வீரர்களான சுசந்திகா ஜெயசிங்க மற்றும் தமயந்தி தர்ஷாத், தற்போது குடியுரிமை கோரி அவுஸ்திரேலியாவில் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவுக்கு பயணம்

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய வீரரான நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் திலகரத்ன உள்ளார்.

இவ்வாறான நிலையிலும் அவரும் அவுஸ்திரேலியாவில் குடிபெயர்ந்து வாழ முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் அவரை தொலைபேசி அழைப்பு மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்பு கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version