FIA ஃபோர்முலா 3 செம்பியன்ஷிப் தொடரின் ஸ்பிரிண்ட் பந்தயத்தில் (Sprint Race) இலங்கையின் யெவன் டேவிட் இரண்டாம் இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற பிரித்தானியாவின் சில்வர்ஸ்டோன் (Silverstone) ஓட்டப்பாதையில் இப்போட்டி நடைபெற்றது.
உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட FIA ஃபோர்முலா 3 பந்தயத்தில் பதக்க மேடையை (Podium) அலங்கரித்த முதலாவது இலங்கை வீரர் இவராவார்.
முக்கிய அடையாளம்
இந்த வெற்றியின் மூலம் சர்வதேச மோட்டார் பந்தய அரங்கில் இலங்கைக்கான ஒரு முக்கிய அடையாளத்தை அவர் பெற்றுத் தந்துள்ளார்.
தனது இளம் வயதிலேயே இத்தகைய சர்வதேச சாதனையை நிலைநாட்டி யெவன் டேவிட் தாய்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளதாக வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/sri-lanka-driver-yevan-david-f3-historic-podium-1783164644
