Home இலங்கை பொருளாதாரம் 2024ஆம் ஆண்டுக்கான போனஸ் தொகை: மின்சார சபை ஊழியர்கள் கோரிக்கை

2024ஆம் ஆண்டுக்கான போனஸ் தொகை: மின்சார சபை ஊழியர்கள் கோரிக்கை

0

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கு 2024ஆம் ஆண்டுக்கான போனஸ் தொகையை விரைவாக வழங்குமாறு தேசிய ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

2024ஆம் ஆண்டுடன் தொடர்புடைய பல அரச நிறுவனங்களுக்கு போனஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில், மின் ஊழியர்களும் அதனைப் பெற வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எரிசக்தி அமைச்சர் 

இதற்கமைய எரிசக்தி அமைச்சர்(Kumara Jayakody) குமார் ஜெயக்கொடிக்கு ஒன்றியமானது, கடிதம் ஒன்றை அனுப்பி இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

எவ்வாறாயினும், மின்சார கட்டண நிவாரணம் மக்களுக்கு கிடைக்காத பின்னணியில், மின்சார சபை ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதில்லை என அரசாங்கம் தற்போது தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version