வரலாற்றில் மிக அதிகமான வரி வருவாயை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கடந்த 2024 ஆம் ஆண்டில் வசூலித்துள்ளது.
இவ்வாறு வசூலிக்கப்பட்ட வரி வருமானம் 1,958,088 மில்லியன் ரூபாய் என என உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது.
இதில் 1,023,207 மில்லியன் ரூபா வருமான வரியாகவும் ரூ.714,684 மில்லியன் ரூபா பெறுமதிசேர் வரியாகவும் வசூலிக்கப்பட்டுள்ளது.
மில்லியன் ரூபா
இந்த தொகையானது. 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 392,669 மில்லியன் ரூபா அதிகரிப்பாகும் என திணைக்களம் கூறியுள்ளது.
நாட்டின் நலனுக்காகவும், நாட்டின் பொது மக்களின் நலனுக்காகவும் வரி செலுத்திய கௌரவமான வரி செலுத்துவோருக்கு பல்வேறு வழிகளில் ஆதரவளித்து வரும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாக திணைக்களம் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.