Home இலங்கை அரசியல் 7 சதவீத சலுகை வட்டியுடன் வழங்கப்படவுள்ள கடன் தொகை

7 சதவீத சலுகை வட்டியுடன் வழங்கப்படவுள்ள கடன் தொகை

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நிதியமைச்சர் என்ற வகையில், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கான புதிய கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனின் கீழ் 7% சலுகை வட்டியுடன் இந்தக் கடன் வழங்கப்படவுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

நாடு மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் நாட்டை மீட்டெடுக்கும் சவாலை ஏற்றுக்கொண்ட தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) கடந்த இரண்டு வருடங்களில் முன்னெடுத்த சரியான பொருளாதார வேலைத்திட்டத்தின் காரணமாகவே நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிந்ததாகவும்  அவர் சுட்டிக்காட்டினார்.

  

ஜனாதிபதி ஊடக மையத்தில்  நடைபெற்ற ஊடகயிலாளர் மாநாட்டிலேயே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடி

மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தல் என்பது மக்களின் ஜனநாயக முடிவுகளில் மிகவும் வலுவான முடிவாக அமையும் என்பதை நாம் அறிவோம். இவ்வாறான வேளையில் இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்த நாட்டின் நிலைமையையும் இன்றைய நிலைமையையும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான களமொன்று அமைக்கப்பட வேண்டும்.

மக்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் மேம்பாடு என்பன அரசாங்கத்தின் பொறுப்பாகும். எனவே, இந்த இக்கட்டான காலகட்டத்தில் பகிரங்க விவாதங்களுக்கான அவசியம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் நாட்டை மீட்பதற்கான சவாலை ஏற்றுக்கொண்ட தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த இரண்டு வருடங்களில் செய்த சாதகமான விடயங்கள் மூலம் நாட்டை சரியான பாதைக்கு கொண்டு வர முடிந்தது.

இது தொடர்பாக எதிர்மறையான கருத்துக்களை முன்வைக்கும் எதிர்க்கட்சி எம்.பி.க்களும் பொருளாதார ஆய்வு நிறுவனங்களின் நிபுணர்களை பொது மேடையில் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கிறேன்.

 புதிய கடன் திட்டம்

கடந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக ஜனாதிபதி மேற்கொண்டுள்ள சாதகமான நடவடிக்கைகளை விரிவாக தெளிவுபடுத்த நிதி இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் நான் தயாராக உள்ளேன்.

அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நிதியமைச்சர் என்ற வகையில், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கான புதிய கடன் திட்டம்  அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் கடனின் கீழ் 7% சலுகை வட்டியுடன் இந்தக் கடன் வழங்கப்படவுள்ளது. இதற்காக 50 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. சிறு, மத்திய தரத்திலான தொழில்களை வலுப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும்.

இதன் கீழ், அதிகபட்சமாக 10 மில்லியன் ரூபாவிற்கு உட்பட்ட கடனைப் பெற முடியும். அத்துடன் சிறிய தேயிலை தோட்டங்களை அபிவிருத்தி செய்வதற்கு 06 பில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளது.

பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு 02 பில்லியன் ரூபா வழங்கப்படும்.

கடன் உத்தரவாத நிறுவனம் ஒன்றின் தேவை காணப்படுகிறது. அந்த கடன் மூலம், எதிர்வரும் ஒக்டோபரில் கடன் உத்தரவாத நிறுவனம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கடனுக்கான பிணையொன்றை வைக்க முடியாத வேளையில் கடன் உத்தரவாத நிறுவனம் அதற்கான உதவிகளை வழங்கும் என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version