Home இலங்கை அரசியல் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் அரசாங்கத்தின் நோக்கம் : ஜனாதிபதி அறிவிப்பு

பொருளாதார வளர்ச்சி தொடர்பில் அரசாங்கத்தின் நோக்கம் : ஜனாதிபதி அறிவிப்பு

0

 சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதும், அதிக போட்டித்தன்மை கொண்டதுமான, ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும், இந்த நாட்டின் வர்த்தக சமூகம் மீது தனக்கு முழு நம்பிக்கை இருக்கின்றது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார். 

தற்போது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முறைமையே நாட்டுக்கு அவசியப்படுகின்றதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி நிறைவேற்று ஜனாதிபதி முறையை பேணுவதா இல்லையா என்பது தற்போதைய பிரச்சினை அல்லவெனவும், நாட்டுப் பொருளாதாரத்தின் எதிர்கால போக்கை தீர்மானிப்பதற்கான வாய்ப்பை மக்கள் இழந்துவிடக்கூடாதெனவும் குறிப்பிட்டார்.

யாழில் பாரிய காணி மோசடி – அதிர்ச்சியில் புலம்பெயர் தமிழர்கள்

இலங்கை பயணிக்க வேண்டிய பாதை

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (26) நடைபெற்ற இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான மாவட்ட 3220 சர்வதேச ரோட்டரி கழகத்தின் 2023/24 வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இலங்கை பயணிக்க வேண்டிய பாதையை தீர்மானிக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதன்போது எந்த வழியில் நாம் செல்ல வேண்டும் என்பதை இந்த நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும். நாம் இங்கிருந்து நகர்வோமா? நாம் இங்கேயே நின்றுவிடுவோமா? அல்லது பின்னோக்கி செல்ல வேண்டுமா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்.

  

இன்று நான் சந்தித்த ஒரு இளைஞர் நாட்டிற்கான உங்கள் திட்டங்கள் என்னவென கேட்டார். இந்த நாட்டின் படித்த மக்களுக்காக என்ன திட்டங்களை எடுத்துள்ளீர்கள்? நாட்டின் பௌதீக உட்கட்டமைப்பை மேம்படுத்த நீங்கள் என்ன திட்டங்களை வைத்திருக்கிறீர்கள்? அந்த அப்படி எந்த திட்டமும் இல்லை என்றேன். நான் சந்தைப் பொருளாதாரத்தைப் பற்றி மட்டுமே சிந்திக்க முடியும் என்று நான் அவரிடம் கூறினேன்.

அதன்போது சந்தை சக்திகள் இந்தத் திட்டங்கள் அனைத்தையும் முடிவு செய்யும். நமது கொள்கை கட்டமைப்பு என்ன என்பதை நாம் தீர்மானிக்கலாம். அதன்படி, அடுத்த மூன்று நான்கு ஆண்டுகளில் என்னென்ன திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்பதை முடிவு செய்து, செயல்படுத்தி, தேவையான மாற்றங்களைச் செய்யலாம்.

ஆனால், எங்களுக்கு வளர்ச்சியைத் தரும் ஒரு நிலையான திட்டம் குறித்து நீங்கள் சிந்தித்தால், அதைச் செய்ய முடியாது என்று நான் அவரிடம் சொன்னேன். சந்தை செயற்பாடுகளில் எவ்வாறு தாக்கம் செலுத்துவது வேண்டும் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். சந்தை சக்திகளை எவ்வாறு கையாள்வது அல்லது சந்தை சக்திகளை எவ்வாறு இயக்குவது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

எனவே நாம் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். ஒரு அரசாங்கம் நியமிக்கப்பட்ட பிறகு ஒரு ஐந்தாண்டு திட்டம் முன்வைக்கப்படுகிறது. அந்தத் திட்டத்தின்படி அரசாங்கமே அனைத்தையும் வழங்குகிறது. எமக்கு இவ்வளவு காலமும் திட்டங்கள் மாத்திரமே இருந்தன. அதனால் தான் இன்னும் வறுமையில் வாடுகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

வாகன இறக்குமதி தொடர்பான முக்கிய அறிவிப்பு

சஹ்ரானுக்கு எதிரான சர்வதேச பிடியாணை! 2018ஆம் ஆண்டிலேயே கிடைத்த புலனாய்வு அறிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version