கடந்த காலங்களில் நாட்டில் பொருளாதார ரீதியாக நிச்சயமற்ற நிலைமை காணப்பட்ட போதிலும் தற்போது அந்த நிலைமை மாற்றப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
பொறுப்பேற்றுள்ள அரசாங்கமானது ஐஎம்எப் விடயத்தில் தொடர்ந்து ஸ்திரமான நிலையில் பயணிப்பதோடு கடன் மறுசீரமைப்பு விடயத்தில் நிலையான தன்மையில் காணப்படுகிறது.
இலங்கை ஆபத்தான் நிலையில்
மேலும் பொருளாதார ரீதியில் இலங்கை ஆபத்தான் நிலையில் இல்லை.
எனினும், உலகளாவிய ரீதியில் பல நிச்சயமற்ற பொருளாதார நிலைமை காணப்படுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக அமெரிக்காவின் தீர்வை வரிக் கொள்கை நாட்டின் வெளிநாட்டுக் கெள்கைக்கு எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து ஆராய்ந்து வருகின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.