Home இலங்கை பொருளாதாரம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து வெளியான தகவல்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்து வெளியான தகவல்

0

இலங்கையின் (Sri Lanka) பொருளாதாரம் 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 5.3% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதுடன், கைத்தொழில் துறையும் 11.8% வளர்ச்சியைப் பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

சனத்தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தினால் (Department of Census and Statistics) அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உலக வங்கியின் கணிப்பு

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், ”2022 ஆம் ஆண்டின் இறுதிக் காலாண்டில் 12% க்கும் குறைவான எதிர்மறையான பொருளாதாரத்தை கொண்ட ஒரு நாடாக இந்த நாடு பதிவானது.

இந்த நிலைமையை நேர்மறையான கண்ணோட்டத்துடன் பார்ப்பவர்கள் இலங்கையின் பொருளாதார பயணத்தை நம்பிக்கையுடன் பார்க்க முடியும்.

உலக வங்கியின் கணிப்புகளின்படி, இலங்கையின் பொருளாதாரம் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தில் 2.2% வளர்ச்சியடையும்.

சர்வதேச நாணய நிதியம்

இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாட்டின் பொருளாதாரம் மறைப் பெறுமானம் 7 இற்கு மேல் இருந்ததாக தெரிவிக்கப்பட்ட ஒரு நாட்டில், இரண்டு வருடங்களில் 2% க்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியை எட்ட முடிந்தமை மிகவும் நல்ல சாதனை.

இதேவேளை தற்போது இலங்கை பின்பற்றும் வேலைத்திட்டம் சர்வதேச நாணய நிதியத்தினால் (International Monetary Fund) தெளிவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

எனினும், அவதானமாக முனநோக்கிச் செல்ல வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்” என அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version