Home இலங்கை அரசியல் ஜனாதிபதி தேர்தலுக்காக மறைமுகமாக திரட்டப்படும் நிதி! 300 மில்லியன் ரூபா குறித்து அம்பலமான தகவல்

ஜனாதிபதி தேர்தலுக்காக மறைமுகமாக திரட்டப்படும் நிதி! 300 மில்லியன் ரூபா குறித்து அம்பலமான தகவல்

0

மதுபான கடைகளுக்கு அனுமதி வழங்குவதன் மூலம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மறைமுகமாக நிதி திரட்டுவதற்கான நடவடிக்கையை நிதி அமைச்சு மேற்கொள்வதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள 1,028 மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கும் நடவடிக்கையில் சில நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே 300 மில்லியனுக்கும் அதிகமான பணம் புழக்கத்தில் இருந்ததாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

அனுமதிப்பத்திரம் 

2024 மே 10 ஆம் திகதிக்குள் சுமார் 1,028 மதுக்கடைகளுக்கு புதிய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்காக 30 மில்லியன் ரூபா பெறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதற்கு முன்னர் 10 மில்லியனும் அனுமதி வழங்கப்பட்ட பின்னர் 20 மில்லியனும் பெறப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் 137 அனுமதிப்பத்திரங்களும், கம்பஹா மாவட்டத்தில் 128 அனுமதிப்பத்திரங்களும், ஹோட்டல்களுக்கு 1,089 அனுமதிப்பத்திரங்களும், பல்பொருள் அங்காடிகளுக்கு 306 அனுமதிப்பத்திரங்களும், உணவகங்களுக்கு 765 அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

உரிமம் 

அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உரிமம் கோரி ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளனர்.

மதுபான சாலை திறக்கும் போது 12.5 மில்லியன் ரூபாவை பிரதேச சபை அல்லது நகர சபைக்கு வைப்புத் தொகையாக செலுத்தி வருடாந்தம் 500,000 ரூபா செலுத்த வேண்டும்.

இது தவிர அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு, 30 மில்லியன் ரூபா நாடாளுமன்ற உறுப்பினர்களால் பெறப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version