தமிழரசுக்கட்சிக்குள் (ITAK) ஏற்பட்ட குழப்பமும், சரியான தலைமைத்துவம் இல்லாமல் அவர்கள் மக்களை அசௌகரியப்படுத்தியதே இந்த படுதோல்விக்கான காரணம் என கொழும்பு பல்கலை சிரேஸ்ட பேராசிரியர் அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை பகடையாக்க முயன்றவர்களுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம் (Jaffna) தோல்வியடைந்தால் அது ஒட்டுமொத்த வடக்கு கிழக்கையும் பாதிக்கும்.
தேசிய மக்கள் சக்தி நிச்சயமாக சொல்லக்கூடும், வடக்கு கிழக்கு மக்களின் ஆணை எங்களுக்குதான் கிடைத்துள்ளது.
இதனை எவ்வாறு ஜனாதிபதி கொண்ட போக போகின்றார் என்பதனை பொறுத்துதான் எதிர்காலத்தில் தமிழ் அரசியல்வாதிகளின் தலையெழுத்து தீர்மானிக்கப்படும்.
தமிழரசுக்கட்சியின்,தேசிய பட்டியல் ஆசனம் ஒரு பெண்ணுக்கு வழங்க வேண்டும்.
தேசிய பட்டியல் வேண்டாம் என்று கூறும் சுமந்திரன் ரணிலை பின்பற்றி காலத்தை தள்ளிவைத்து பின்பு பதவிக்கு வர எத்தனிக்கின்றாரா?
வடக்கு கிழக்கு மக்களின் துன்ப துயரங்கள் எவ்வாறானது என்பதை உணர்ந்தவர்கள் தமிழ் தலைமைத்துவத்தில் இருக்கும் போது தான் மக்களின் உணர்வு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பிரதிபலிக்கும்.
இந்த விடயங்கள் தொடர்பில் முழுமையாக ஆராய்கின்றது இன்றைய ஊடறுப்பு….
https://www.youtube.com/embed/_aZnx3cg058