புதிய இணைப்பு
கொழும்பில் அமைந்துள்ள சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்கு முன்பாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இன்று காலை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இடம்பெற்ற நிறைவேற்றுக்குழு கூட்டத்தின் பின்னரே இந்த பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக இன்று நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் விஜயதாச ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினர் கட்சியின் அலுவலகத்திற்குள் செல்ல முற்பட்ட நிலையில் இந்த பதற்ற நிலை ஏற்பட்டதாக குறிப்பிடப்படுகின்றது.
கட்சியின் ்தலைமையகத்தில் அண்மையில் பல முக்கிய ஆவணங்கள் காணாமல் போனதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் குறித்த கட்டிடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே இன்றைய தினம் அமைச்சர் விஜயதாச உள்ளிட்ட குழுவினர் உள்ளே செல்ல முற்பட்ட பொழுது பதற் றநிலை ஏற்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நீதித்துறை சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்சவை(Dr Wijeyadasa Rajapakshe) நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று கூடிய கூட்டம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு இன்று (21) நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்று சபைக் கூட்டம், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) தலைமையில் இன்று காலை கூடியது.
இந்நிகழ்வில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச, பதில் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால ஆகியோர் கலந்துகொண்டனர்.
கொழும்பை உலுக்கிய கோர தாக்குதல் – உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்திய சோகம்
ராஜபக்சர்கள் மீது கடும் குற்றச்சாட்டு : கடும் கோபத்தில் நாமல் எம்.பி
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |