Home இலங்கை அரசியல் நாசவேலைகளை செய்யவேண்டாம் : தயாசிறி விடுத்துள்ள எச்சரிக்கை

நாசவேலைகளை செய்யவேண்டாம் : தயாசிறி விடுத்துள்ள எச்சரிக்கை

0

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின்(slfp) வழமையான பொதுச் செயலாளராக செயற்படும் உரிமையில் தலையிட வேண்டாம் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர (Dayasiri Jayasekara)கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்படி நாளை (05) காலை 9.30 மணிக்கு டார்லி வீதியிலுள்ள கட்சியின் தலைமையகத்திற்குச் சென்று பணிகளை பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவித்த அவர், அரசாங்கத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி எந்தவொரு குழுவும் சீர்குலைக்க முயற்சித்தால், தாம் அதை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன் எனவும் குறிப்பிட்டார்.

கட்சியின் முன்னேற்றத்திற்காக உழைக்க அனுமதி

எனவே நாசவேலைகளை செய்யாமல் சுதந்திரமாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னேற்றத்திற்காக உழைக்க அனுமதிக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கட்சியின் தலைமையகம் யாருடைய சொத்தும் அல்ல என்றும், அந்த இடத்திற்கும் வரும் மக்களுக்கும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு காவல்துறை மா அதிபர், பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் மற்றும் மருதானை காவல் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோருக்கு அறிவித்துள்ளதாகவும் ஜயசேகர தெரிவித்தார்.

எதற்கும் பயப்பட வேண்டாம்

இந்த நிகழ்விற்கு வருகை தருமாறு சிறிலங்கா சுதந்திரக் கட்சியை நேசிக்கும் அனைவரையும் மரியாதையுடன் அழைக்கின்றோம் என தெரிவித்த ஜெயசேகர, எவரும் எதற்கும் பயப்பட வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version