Home இலங்கை அரசியல் புதிய கூட்டணி அமைக்க தயாராகும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி

புதிய கூட்டணி அமைக்க தயாராகும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி

0

உள்ளுராட்சிமன்றம் மற்றும் மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் புதிய கூட்டணி அமைப்பது தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள கட்சி தலைமையகத்தில் நேற்று(27.12.2024) கருத்து தெரிவிக்கும்போதே அவர், இதனை கூறியுள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில், “ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை மறுசீரமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கட்சியின் உறுப்பினர்கள்

அதற்கமைய சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் பலருடனும் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எம்முடன் இணையவுள்ளவர்கள் யார் என்பது குறித்து விரைவில் அறிவிப்போம்.

சகல தொகுதி அமைப்பாளர்களுக்கும் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2ஆம் திகதியிலிருந்து கட்சியின் புதிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

மேலும், கடந்த காலங்களில் அமைக்கப்பட்ட கூட்டணிகள் தற்போது நிறைவுக்கு வந்துள்ளன” என்றார்.

NO COMMENTS

Exit mobile version