Home இலங்கை அரசியல் குறைக்க வேண்டிய எரிபொருளின் விலை! புதிய அரசாங்கத்திடம் முன்வைக்கப்படும் கேள்வி

குறைக்க வேண்டிய எரிபொருளின் விலை! புதிய அரசாங்கத்திடம் முன்வைக்கப்படும் கேள்வி

0

தேர்தல் மேடைகளில் எரிபொருளின் விலையை குறைப்போம், மின் கட்டணத்தை குறைப்போம், அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்துவோம் என கூறினார்கள்.  இப்போது புதிய அரசாங்கம் ஒன்று அமையப் பெற்றுள்ளது.  அப்படியானால் தேர்தல் மேடைகளில் கூறிய வாக்குறுதிகள் எங்கே என்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் வைத்து நேற்றையதினம் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எரிபொருள் விலை

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒக்டேன் 92 ஒரு லீட்டர்  துறைமுகத்திற்கு வந்திறங்கும் போது அதன் விலை 195 ரூபாவாக இருந்தது, புதிய விலைகளின் கீழ் கூட ஒரு லீட்டர்  எரிபொருளுக்கு அரசாங்கம் 117 ரூபா வரி அறவிடுகின்றது. 

 

தேர்தல் காலத்தில் அதிக வரி விதிக்கப்படுகிறது, வரம்பற்ற லாபத்தைப் பெறுகிறார்கள். எனவே எண்ணெய் விலை குறைக்கப்படும். வரிகள் நீக்கப்படும். மேலும் மின் கட்டணம்  40% குறைக்கப்படும் என இரண்டு வாரங்களுக்கு முன்பு மேடைகளில் பேசினார்கள்.

உண்மையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு, இலங்கைக்கு பெட்ரோல்(92) ரூ. 195க்கும், டீசல் (வழக்கமான) ரூ. சுமார் 200க்கும் கொள்வனவு செய்துள்ளனர்.

சம்பள அதிகரிப்பு

அதன்படி, புதிய விலையை எடுத்துக் கொண்டாலும், ஒரு லீட்டர் பெட்ரோலுக்கு சுமார் ரூ.117 வரியும், டீசலுக்கு சுமார் ரூ.83 வரியும் அதிகமாக விதிக்கப்படுகிறது என தெரிகிறது.

மேடைகளில் என்ன பேசினாலும் அதுதான் நிஜம். எனவே இன்னும் மின் கட்டணத்தை குறைக்க எந்த முன்மொழிவும் சமர்ப்பிக்கப்படவில்லை.

கடந்த ஜனாதிபதி அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வை வழங்கினார்.  அநுரகுமார திஸாநாயக்கவிற்கு பெருமளவான மக்கள் வாக்களித்திருப்பதை இந்நாட்டு உழைக்கும் மக்கள் தபால் மூல வாக்களிப்பு மூலம் பார்த்துள்ளனர். சம்பள உயர்வு வழங்கப்படும்  என்று அந்த மக்களும் நம்புகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version