Home இலங்கை அரசியல் மக்கள் ஆணையைப் பெற்று பேரம் பேசும் சக்தியாக வருவோம்! கு.திலீபன்

மக்கள் ஆணையைப் பெற்று பேரம் பேசும் சக்தியாக வருவோம்! கு.திலீபன்

0

மக்கள் ஆணையைப் பெற்று பேரம் பேசும் சக்தியாக வருவோம் என ஈபிடிபி கட்சியின்
வன்னி மாவட்ட வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன்
தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் உள்ள தேர்தல் பணிமனையில் வேட்புமனுக்களை தாக்கல்
செய்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர்  மேற்கண்டவாறு  குறிப்பிட்டுள்ளார்.

வேட்பு மனுத் தாக்கல் 

 மேலும் தெரிவிக்கையில்,

நாடாளுமன்ற தேர்தலுக்கான எமது வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனையறிந்து மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வன்னி மட்டுமன்றி
யாழ்ப்பாணம், கிழக்கு மாகாணம், கொழும்பு ஆகிய இடங்களிலும் போட்டியிட்டு
மக்களின் ஆணையைப் பெற்று தோழர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான எமது கட்சி பேரம்
பேசும் சக்தியாக வருவோம்.

வன்னியில் இரண்டு ஆசனங்களையும், யாழில் மூன்று ஆசனங்களையும் பெறக் கூடிய நிலை
இருக்கின்றது  என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version