Home இலங்கை சமூகம் இலங்கை அரச அதிகாரிகளுக்கு அதிர்ச்சி செய்தி! சம்பளத்தில் அறவிடப்படும் அபராதம்..

இலங்கை அரச அதிகாரிகளுக்கு அதிர்ச்சி செய்தி! சம்பளத்தில் அறவிடப்படும் அபராதம்..

0

சொத்து மதிப்பீட்டறிக்கையை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளுக்கு இன்று(14) முதல் அபராதம் விதிக்கப்படும் என்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  

மேலும், பல அதிகாரிகள் தங்களது சொத்து மதிப்பீட்டறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாகவும், நாளைய(15) தினத்திற்குப்  பின்னர்  விபரங்களை சமர்ப்பிக்கும் அரச அதிகாரிகளிடம் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  

இறுதி முடிவு இன்று..

 ஆணைக்குழு அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இது தொடர்பில் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அபராதம் விதிப்பது தொடர்பில் இறுதி முடிவு இன்று அறிவிக்கப்படும் என்று ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று முதல் தாமதமாகும் நாட்களுக்கான அபராதம் அவர்களின் சம்பளத்தில் அறவிடப்படும்.

ஜூன் 30 ஆம் திகதிக்குள் சொத்து மதிப்பீட்டறிக்கையை சமர்ப்பிக்காத அரச அதிகாரிகளுக்கு, மேலும் 02 வாரங்கள் அவகாசம் வழங்கப்பட்டது. அந்தக் காலத்தில் மதிப்பீட்டறிக்கைகளைச் சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எச்சரிக்கை கடிதங்கள் வழங்கப்படும் என்று ஆணைக்குழு அறிவித்துள்ளது.

சலுகைக் காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில்,  மேலும் மதிப்பீட்டறிக்கையை சமர்ப்பிக்காத அதிகாரிகளின் பெயர் பட்டியலை நிறுவனத் தலைவர்கள் எதிர்வரும் நாட்களில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவித்துள்ளது. 

You may Like This..

NO COMMENTS

Exit mobile version