Home இலங்கை அரசியல் வேலை பறிபோகும் நிலை! அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை

வேலை பறிபோகும் நிலை! அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை

0

சில அரச அதிகாரிகள் வேண்டுமென்றே காலதாமதமாக வேலை செய்கின்றனர். வேலை செய்ய முடியாதவர்களை நீக்கிவிட்டு, வேலை செய்யக்கூடிய ஆட்களை பணியில் இணைத்துக்கொள்ள சொல்கின்றேன் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கம்பஹா மாநகரசபையில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில்,கம்பஹா மாநகரசபையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள செய்தி

அரசாங்கம் அப்படியே இருக்கும்

இது தொடர்பில் மேலும் கூறுகையில், ”அரச அதிகாரிகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் அரசாங்கம் மாற போகின்றது என்று. இல்லை அரசாங்கம் அப்படியே இருக்கும். இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் மட்டுமே நடக்கும்.

சில அரச அதிகாரிகளின் தவறான முடிவுகளினால் அரசாங்கமும் மக்களும் பாரிய நட்டத்தை எதிர்கொள்கின்றனர்.

அதிகாரிகள் செய்யும் இவ்வாறான தவறுகளினால் இறுதியில் மக்களால் குற்றம் சுமத்தப்படுவது அரசியல்வாதிகள் தான்.

சில அரச நிறுவனங்களில் அதிகாரிகளின் அதிகாரத்துவம் காரணமாக அபிவிருத்தித் திட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

கோட்டாபய -மகிந்த -பசில் உட்பட பலருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! விடுக்கப்பட்டுள்ள பகிரங்க எச்சரிக்கை

குறிப்பாக கம்பஹாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பராமரிப்பு பணிகள் இன்று வரை முடிக்கப்படவில்லை. இது தொடர்பாக பொதுமக்கள் மற்றும் முன்னாள் மாநகர சபையின் மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்தும் எனக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

நகரசபையில் ஐந்து டிராக்டர்கள் உள்ளன. இன்று ஒரு டிராக்டர் மட்டுமே இயங்குவதாக கூறப்படுகிறது. மீதமுள்ள நான்கு டிராக்டர்களை ஏன் இது வரை பெற முடியவில்லை?

பிரச்சினைகள்

கம்பஹாவில் உள்ள ஏனைய உள்ளூராட்சி நிறுவனங்களில் இவ்வாறான பிரச்சினைகள் வருவதில்லை. கம்பஹா பிரதேச சபை, மினுவாங்கொடை நகர சபை, உள்ளுராட்சி சபையின் பணிகள் முறையாக நடைபெற்று வருகின்றன. அபிவிருத்தித் திட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

ஆனால் கம்பஹா நகர சபையின் பணிகள் எப்போதுமே தாமதமாகவே நடைபெறுகின்றன. அதிகாரிகளின் பலவீனமே இதற்கு காரணம். இதில் அதிகாரிகள் வேண்டுமென்றே காலதாமதம் செய்கின்றனர்.

நகரசபை எடுக்கும் முடிவுகளை முறையாக செயற்படுத்த வேண்டும். அதிகாரிகள் வேலை செய்யாததால், மக்கள் எங்களுக்கு ஏசுகின்றனர்.

இலங்கையின் அனைத்து ஆளுநர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், கம்பஹா மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் ஏற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகளின் கடின உழைப்பால் இன்று நடந்துள்ளது.

இலங்கைக்கு பணம் அனுப்புவதில் புலம்பெயர் தமிழர்களின் திடீர் முடிவு

சில அதிகாரிகள் வேண்டுமென்றே காலதாமதம் செய்கின்றனர்.முடியாதவர்களை நீக்கிவிட்டு, வேலை செய்யக்கூடிய ஆட்களை போடச் சொல்கிறேன். நாம் பிரயாணம் செல்லும்போது, வேலை செய்யக்கூடியவர்கள் குழுவாக இருக்க வேண்டும்.

அதிகாரிகளின் தாமதத்தால் அரசுக்கு எவ்வளவு இழப்பு? ஒருங்கிணைப்புக் குழுவின் முடிவுகளுக்கு அதிகாரிகள் செவிசாய்ப்பதில்லை. எடுக்கும் முடிவுகள் வெறும் பேச்சில் எடுக்கப்பட்ட முடிவல்ல. முடிவு செய்யப்பட்ட ஆவணங்கள் உள்ளன.

பணத்தின் பின்னால் மட்டும் தான் ஓடுகிறார்கள்

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஒப்புதல் அளித்தவுடன், செயல்படுத்த வேண்டிய திட்டங்களை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு அனுப்புகிறோம். மதிப்பீடு செய்து தயார் நிலையில் வைக்க வேண்டியது அதிகாரிகளின் பொறுப்பு தான். அனுமதி கிடைத்தவுடன் வேலைகளை ஆரம்பிக்க முடியும்.

இங்குள்ள மிகப்பெரிய தவறு வேலை செய்யும் போது ஒருங்கிணைப்பில் உள்ள சிக்கல். அவை சரி செய்யப்பட வேண்டும்.

சில அரச நிறுவனங்களுக்குள் அரசியல்வாதிகள் நுழைய முடியாது என்ற கருத்து நிலவுகிறது. அப்படிச் செய்ய முடியாது. ஏனெனில் ஒரு அரசியல்வாதி இந்த நாட்டின் குடிமகன்.

இன்றைய உள்ளூராட்சி நிறுவனங்களில் அரசியல் அதிகாரம் இல்லை, எனவே அதிகாரத்துவம் உருவாக்கப்பட்டு வேலை செய்வதில்லை.

பணத்தின் பின்னால் மட்டும் தான் ஓடுகிறார்கள். அரசியல் அதிகாரம் பொதுமக்களின் சார்பாக பேசியது இன்று நடக்கவில்லை.

நாங்கள் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளோம், மேலும் இந்த அமைப்பை விரைவுபடுத்தி திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டும் என்பதே எங்கள் எதிர்பார்ப்பாகும்.”என தெரிவித்துள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version