Home இலங்கை அரசியல் டீசல் மற்றும் அனல் மின் நிலைய மாபியாவின் பிடியில் சிக்கியுள்ள அரசாங்கம்

டீசல் மற்றும் அனல் மின் நிலைய மாபியாவின் பிடியில் சிக்கியுள்ள அரசாங்கம்

0

தற்போதைய அரசாங்கமும் டீசல் மற்றும் அனல் மின் நிலைய மாபியாவின் பிடியில்
சிக்கியுள்ளது  என்ற  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார். 

மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத்  தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அதிகரித்துள்ள மின்சார கட்டணம் 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் இல்லாவிட்டாலும்,
நாட்டின் மின்சார உற்பத்தியில் டீசல் மின் உற்பத்தி நிலையம் மற்றும் அனல் மின்
நிலைய மாபியாக்களுக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

காற்று,
சூரிய ஒளி மற்றும் நீர் ஆகியவற்றைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும்
புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் விலை குறைவாக இருந்தாலும், புதுப்பிக்கத்தக்க
எரிசக்திக்கு அரசு கட்டுப்பாடுகளை விதித்து, டீசல் மற்றும் அனல் மின்சாரம்
பயன்பெறும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

சதிகாரர்களால் மின்சாரத்துறை
கையகப்படுத்தப்பட்டுள்ளது. மின்சாரத்தை அதிக விலைக்கு பாவனையாளர்களுக்கு
வழங்கும் மாபியாக்களிடம் மின்சாரத்துறை கையளிக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை வழங்குவோம் என மேடைக்கு மேடை
பிரஸ்தாபித்த அரசாங்கம் தற்போது எரிபொருள் மற்றும் அனல் மின் நிலைய
மாபியாக்களின் அடிமைகளாக மாறியுள்ளது.

அரசாங்கம் இவ்வாறு செயற்பட்டாலும்
ஐக்கிய மக்கள் சக்தி புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பாதுகாக்க நடவடிக்கை
எடுக்கும்  என குறிப்பிட்டுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version