Home இலங்கை சமூகம் மனித உரிமை மீறல்களின் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை மீண்டும் நிராகரித்த இலங்கை

மனித உரிமை மீறல்களின் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையை மீண்டும் நிராகரித்த இலங்கை

0

மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஐக்கியநாடுகளின் ஆதாரங்களை சேகரிக்கும் வெளியக பொறிமுறையை இலங்கை மீண்டும் நிராகரித்துள்ளது.

ஐக்கியநாடுகளின் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட குறித்த திட்டத்தை ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தரவதிவிடப்பிரதிநிதி ஹிமாலி அருணதிலக நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை பயனற்றது என்றும் இலங்கையில் சமூகங்களை பிரிக்கவும் துருவமயப்படுத்தவும் மாத்திரம் அது உதவும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

இரட்டை நிலைப்பாடு

அதனால் குறிப்பிடத்தக்க நன்மைகள் இல்லை எனவும் ஹிமாலி அருணதிலக சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகெங்கிலும் உள்ள சவாலான மனித உரிமை சூழ்நிலைகளை பாரபட்சமற்றவிதத்தில்,தேர்ந்தெடுக்கப்படாத தன்மையுடன், புறநிலையுடன் இரட்டை நிலைப்பாடுகளை தவிர்த்து மதிப்பிடவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கோட்பாடுகளிற்கு முரணாண தன்னிச்சையான செயற்பாடுகளை இலங்கை கடுமையாக எதிர்க்கின்றது.

மேலும் ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறை என்பது ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு உறுப்புநாடுகள் வழங்கிய ஆணைக்கு முரணானது எனவும் நிரந்தரவதிவிடப்பிரதிநிதி தெரிவித்துள்ளார்.

இது ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினை அரசியல் மயப்படுத்தி அதன் மீதான நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version