Home இலங்கை பொருளாதாரம் ட்ரம்ப் நிர்வாகத்துடன் விவாதத்துக்கு தயாராகும் இலங்கை அரசு

ட்ரம்ப் நிர்வாகத்துடன் விவாதத்துக்கு தயாராகும் இலங்கை அரசு

0

நாட்டின் மீது விதிக்கப்படும் புதிய வரிகள் குறித்து ட்ரம்ப் நிர்வாகத்துடன் விவாதிக்கத் தயாராக இருப்பதாக அரசாங்கம் கூறியுள்ளது.

வர்த்தக சமநிலையை நியாயமான முறையில் நிர்வகிப்பதற்கான வழிகளை ஆராய அமெரிக்க நிர்வாகத்துடன் விரைவில் குறித்த கலந்துரையாடலில் ஈடுபட அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

44% பரஸ்பர வரி

“இலங்கை தற்போது IMF இன் நீட்டிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் பொருளாதார மீட்சியை நோக்கி பயணித்து வருகிறது.

இதற்கு அமெரிக்கா வழங்கிய ஆதரவை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த 44% பரஸ்பர வரி தொடர்பாக, இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக சமநிலையை நியாயமாக நிர்வகிக்கும் வழிகளை ஆராய அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் தயாராக உள்ளோம்.

ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், இரு நாடுகளும் புதிய வளர்ச்சி யுகத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பைப் பெற முடியும்,” என இலங்கை நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version