Home இலங்கை பொருளாதாரம் ஒட்டுமொத்த பணவீக்கம் ஒரு மாதத்தில் அதிகரித்துள்ளது

ஒட்டுமொத்த பணவீக்கம் ஒரு மாதத்தில் அதிகரித்துள்ளது

0

தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் வெளியிட்ட தரவுகளின்படி,
தேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டால் அளவிடப்படும், ஒட்டுமொத்த பணவீக்க
விகிதம், 2025, ஆகஸ்ட்டில் 1.5% உடன் ஒப்பிடும்போது, ​​2025, செப்டம்பரில்
2.1% ஆக அதிகரித்துள்ளது.

பணவீக்கம் 

இதற்கிடையில், உணவுப் பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 2.9% ஆக இருந்த நிலையில்,
செப்டம்பரில் 3.8% ஆகரித்துள்ளது,

மேலும் உணவு அல்லாத குழுவின் ஆண்டு பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 0.4% ஆக
இருந்த நிலையில், கடந்த மாதம் 0.7% ஆக அதிகரித்துள்ளது.

பணவீக்கத்தில் உணவுப் பொருட்களின் பங்களிப்பு ஆகஸ்ட் 2025 உடன் ஒப்பிடும்போது
செப்டம்பரில் 1.68% ஆக இருந்தது.

2015, செப்டம்பருக்கான அனைத்து பொருட்களுக்கான பண வீக்க விகிதம் 207.4 ஆகும்,

இது ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது குறியீட்டு புள்ளிகளில் 0.2
அதிகரிப்பைப் பதிவு செய்கிறது. 

NO COMMENTS

Exit mobile version