Home இலங்கை சமூகம் ஈரான் தாக்குதல் எதிரொலி : இலங்கை – இஸ்ரேல் விமான சேவை இரத்து

ஈரான் தாக்குதல் எதிரொலி : இலங்கை – இஸ்ரேல் விமான சேவை இரத்து

0

இலங்கைக்கும்(sri lanka) இஸ்ரேலுக்குமிடையிலான(israel) அனைத்து விமான சேவைகளும் எதிர்வரும் 07ஆம் திகதி வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் நிமல் பண்டார(nimal bandara) தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீதான ஈரானின்(iran) ஏவுகணை தாக்குதல்களையடுத்து டெல் அவிவ் விமான நிலையத்தின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பயணதிகதியை மாற்றுமாறு அறிவிப்பு

07ஆம் திகதிக்கு முன்னைய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையே விமான பயணங்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தவர்கள் பயணத்துக்கான உரிய திகதியை மாற்றி அமைக்குமாறு தூதரகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, அங்கு தங்கியுள்ள அனைத்து இலங்கையரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், எதிர்காலத்தில் ஏதேனும் அனர்த்த சூழ்நிலை ஏற்படுமாயின் அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தூதுவர் தெரிவித்தார்.

மக்களுக்கு இஸ்ரேல் அரசின் அறிவுறுத்து

முடிந்தவரை பயணங்களை குறைத்து வீட்டிலேயே இருக்குமாறு இஸ்ரேலிய அரசாங்கம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.

எதிர்கால தாக்குதல்களிலிருந்து பொது மக்களின் பாதுகாப்புக்காக நிலத்தடி முகாம்கள், நிலத்தடி மருத்துவமனைகள் மற்றும் அவசரகால அம்புலன்ஸ் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலிய அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.   

NO COMMENTS

Exit mobile version