Home இலங்கை அரசியல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ரத்து செய்யப்படுமா!எடுக்கப்படவுள்ள இறுதி தீர்மானம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ரத்து செய்யப்படுமா!எடுக்கப்படவுள்ள இறுதி தீர்மானம்

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்வதா இல்லையா என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுப்பதற்காக கட்சித் தலைமைக் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது.

சபாநாயகர் பிமல் ரத்நாயக்க (Bimal Rathnayake) தலைமையில் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தொடர்பில் அங்கு எடுக்கப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் இறுதி இணக்கப்பாடு எட்டப்படும் என பொது நிர்வாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

நிதி ஒதுக்கீடு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ரத்து செய்யுமாறு பல அரசியல் கட்சிகள் ஏற்கனவே அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழு முதலில் ஏற்பாடு செய்த போதிலும், நிதி ஒதுக்கீடு கிடைக்காததால் தேர்தல் இடைநிறுத்தப்பட்டது.

இந்த நிலையில், இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மிக விரைவாக நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் வலியுறுத்தியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version