வாரத்தின் ஒவ்வொரு நாளும் இரவு 8-9 மணி வரை தான் அமைச்சில் இருப்பதாக துணை அமைச்சர் சதுரங்க அபேசிங்க(Chathuranga Abeysinghe) தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கலாச்சாரம்
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“இதற்கு முன்பு இருந்த அமைச்சர்கள் அவ்வாறு செய்யவில்லை.
சில சமயங்களில் கடிதங்களில் கையெழுத்திட கூட அமைச்சர்களின் வீட்டிற்குச் செல்ல வேண்டியிருந்தது.
தனது பிறந்தநாளான 22ஆம் திகதியும் கூட நான் அமைச்சிற்குச் சென்றேன்.
பழைய அரசியல் கலாச்சாரத்தை மாற்றவும், பட்ஜெட் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியை நாட்டின் முன்னேற்றத்திற்காக முதலீடு செய்யவும் பொது ஊழியர்களுடன் இணைந்து பணியாற்றுவேன்” என குறிப்பிட்டுள்ளார்.
