Home இலங்கை அரசியல் தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாக ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள அதிருப்தி

தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாக ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள அதிருப்தி

0

Courtesy: Nilavan

சிறுபான்மை சமூகங்கள் தமிழ் பொது வேட்பாளர் போன்ற தனிப்பட்ட முடிவுகளை எடுப்பதால் எந்த பயனும் இல்லை என ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸின் தலைவர் (SLMC) ரவூப் ஹக்கீம் (Rauf Hakeem) தெரிவித்துள்ளார்.

ஏறாவூர் (Eravur) மீராக்கேணியில் நடைபெற்ற கட்சி கிளை அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில்,

“இலங்கையில் தேர்தல் நடக்குமா என்ற சந்தேகம் உள்ளது. தேர்தல் நடக்குமா நடக்காதா என்பது பதவியில் இருக்கும் ஜனாதிபதிக்கு மட்டும் தான் தெரியும்.

தேசிய ரீதியிலான சாதனை படைக்க தயாராகும் யாழ். மத்திய கல்லூரி மாணவர்கள்

அறுதிப் பெரும்பான்மை

தேர்தல் நடந்தால் வெற்றி பெறலாமா என்ற நம்பிக்கை ஏற்கனவே தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ள இரண்டு தரப்பிற்கும் இல்லை.

ஆனால், நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் ஆகக் கூடுதலான ஆசனங்களை பெறலாம் என்பது நாங்கள் சார்ந்திருக்கும் அணியான ஐக்கிய மக்கள் சக்திக்கு மாத்திரமே உண்டு.

எனினும், ஐக்கிய மக்கள் சக்தியால் ஆகக் கூடுதலான ஆசனங்களை பெறலாம் என்றாலும் அறுதிப் பெரும்பான்மையை பெற முடியுமா என்ற கேள்வி உள்ளது” என தெரிவித்துள்ளார்.

வடக்கு – கிழக்குக்கு சுயநிர்ணய உரிமையை வழங்கமாட்டோம்: சஜித், அனுரவிடம் கோரிக்கை

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version