Home இலங்கை அரசியல் வலுக்கும் உறவு : சீனாவில் புதிய தூதரகத்தை திறக்கும் அநுர அரசு

வலுக்கும் உறவு : சீனாவில் புதிய தூதரகத்தை திறக்கும் அநுர அரசு

0

சீனாவின்(china) செங்டு நகரில் இலங்கை(sri lanka) துணைத் தூதரகம் ஒன்றை நிறுவுவதற்கான பணிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்கவின்(anura kumara dissanayake) சீன விஜயத்தின் போது இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்(vijitha herath) தெரிவித்தார்.

இலவசமாக வழங்கப்படப்போகும் இடம்

“அந்த மாநிலத் தலைவர் எங்களுக்கு தேவையான இடத்தையும் வசதிகளையும் இலவசமாக வழங்க ஒப்புக்கொண்டார். அதன்படி, எதிர்காலத்தில் செங்டு நகரில் வெளியுறவு அமைச்சகமாக ஒரு புதிய தூதரக அலுவலகத்தைத் திறக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.”

ஜனாதிபதியின் சீனப் பயணம் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இன்று (22) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சீன பயணத்தில் ஆழமான கலந்துரையாடல்

ஜனாதிபதியின் சீனப் பயணத்தின் போது, ​​பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பை வளர்ப்பது குறித்து இரு தரப்பினரும் ஆழமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாகவும் அமைச்சர் கூறினார்.  

NO COMMENTS

Exit mobile version