Home இலங்கை அரசியல் அநுர அரசாங்கம் மக்களுக்கு வழங்கியுள்ள உறுதி மொழி

அநுர அரசாங்கம் மக்களுக்கு வழங்கியுள்ள உறுதி மொழி

0

 ஒட்டுமொத்த இலங்கை மக்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் அபிலாஷைகளுக்கு எதிராக ஒருபோதும் செயற்பட மாட்டோம் என்ற உறுதிப்பாட்டை தமது அரசாங்கம் வழங்குவதாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்(Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார். 

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

மக்களின் நம்பிக்கை 

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

வடக்கு தெற்கு என்ற வேறுபாடு இன்று நாட்டில் அனைத்து பகுதிகளிலும் வாழும் மக்கள் தேசிய மக்கள் சக்தியை ஆதரித்துள்ளனர்.

குறிப்பாக வடக்கு மக்கள் தேசிய மக்கள் சக்தியின் மாவட்டமாக யாழ்ப்பாணத்தை மாற்றியுள்ளனர். விசேடமாக இதற்காக அந்த மக்களுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வெற்றி ன்பது சவால் மிக்கதொரு வெற்றியாகும். பாரம்பரியமாக ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்திருந்த கட்சிகளை புறந்தள்ளி மக்கள் எம்மை ஆதரித்துள்ளனர்.

எனவே மக்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் அபிலாஷைகளுக்கு எதிராக ஒருபோதும் செயற்பட மாட்டோம் என்ற உறுதிப்பாட்டை வழங்குகின்றோம்.

அதேபோன்று கடந்த 76 வருடங்களாக இலங்கையில் இருந்த ஆட்சியாக எமது ஆட்சி இருக்காது என்பதை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

மக்கள் நலன் சார்ந்த ஆட்சியை நாங்கள் முன்னெடுப்போம். கடினமன பாதைகளை நடந்து மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை என்பது மாற்றத்திற்கான பிரதிபலிப்பாகவே உள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version