Home இலங்கை அரசியல் அரிசி மற்றும் தேங்காய் பிரச்சினை! அநுர அரசாங்கம் தொடர்பான சாத்தியப்படாத எண்ணங்கள்

அரிசி மற்றும் தேங்காய் பிரச்சினை! அநுர அரசாங்கம் தொடர்பான சாத்தியப்படாத எண்ணங்கள்

0

அரிசி மற்றும் தேங்காய் ஆகியவற்றின் விலை அதிகரிப்புக்கும், பற்றாக்குறைக்கும் அநுர அரசாங்கத்தை குற்றம் சுமத்துவதில் பயனேதும் இல்லை என்று பேராசிரியர் எம்.கணேசமூர்த்தி(Ganeshamoorthi) தெரிவித்துள்ளார். 

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

சாத்தியப்படாத ஒரு விடயம்

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

அரசாங்கம் பதவிக்கு வந்த உடனேயே வீழ்ந்திருந்த பொருளாதாரத்தை தூக்கி நிறுத்திவிடலாம், அனைத்தையும் மாற்றிவிடலாம் என நினைப்பது சாத்தியப்படாத ஒரு விடயம். அவ்வாறு செய்யவும் முடியாது.

அதேசமயம் இலங்கை போன்ற ஒரு நாடு ஐஎம்எப் இனுடைய நிகழ்ச்சித் திட்டத்திற்குள் இருக்கும் போது எடுத்தோம், கவிழ்த்தோம் என்று எதையும் செய்ய முடியாது. அதற்குள்ளேயே இருந்து சில விடயங்களை மாற்ற முடியும். அதைத்தான் இந்த அரசாங்கம் செய்யப் போகின்றது.

தற்போதைய அரசாங்கம், தாம் ஆட்சிக்கு வந்த பின்னர் அரிசி இறக்குமதி செய்யப் போவதில்லை, உள்நாட்டில் உள்ள வளங்களைப் பயன்படுத்திதான் அரிசி உற்பத்தி செய்யப் போகின்றோம் என்று கூறினர்.

அதில் தவறொன்றும் இல்லை.

இந்த அரசாங்கம் பதவிக்கு வந்து இரண்டு மாதங்கள் தான் ஆகின்றன. அரிசி உற்பத்தி செயன்முறைக்கு கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கும் மேலான காலம் தேவை.

ஆகவே, அரிசி தட்டுப்பாட்டுக்கு தற்போதைய அரசாங்கத்தை குற்றம் சுமத்துவதில் பயனேதுமில்லை.

அதே போலத்தான் தேங்காயும்.

விலங்குகளின் காரணமாகவும், வானிலையின் காரணமாகவும் பயிர் அழிவுகள் மிக மோசமாக இடம்பெற்றுள்ளன. விளைச்சலில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதுதான் தேங்காய் விளைச்சலில் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.   

NO COMMENTS

Exit mobile version