Home இலங்கை அரசியல் இலங்கையின் சட்டங்களில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள்

இலங்கையின் சட்டங்களில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றங்கள்

0

இலங்கையில் மிகவும் முக்கியமான 15 சட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

கடந்த 18 மாதங்களில் சுமார் 75 சட்டமூலங்கள் நாடாளுமன்றத்தில சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு நாட்டுக்குத் தேவையான அடிப்படை மாற்றங்களைச் செய்ய முடிந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.


ஊழல் தடுப்புச் சட்டம்

நமது நாட்டின் நீதித்துறைக் கட்டமைப்பில், நீதியை நிலைநாட்டுதல் தொடர்பான மிகப்பாரிய சட்ட மறுசீரமைப்புகள் இடம்பெற்ற காலமாக இக்காலகட்டத்தைக் குறிப்பிடலாம் என தெரிவித்துள்ளார்.

அரச துறையிலும், தனியார் துறையிலும் இலஞ்சம், மோசடி, ஊழல், கொமிஸ் எடுத்தல் போன்றவற்றைத் தடுக்கும் வகையில் ஊழல் தடுப்புச் சட்டம் அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் ஊழல் எதிர்ப்பு சாசனத்துடன் பொருந்தும் வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு பல அதிகாரங்களும் சுதந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள்

விளையாட்டு மற்றும் பாலியல் இலஞ்சம் தொடர்பாக புதிய குற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதையும் குறிப்பிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பெயரளவில் இருந்த சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான சட்டம் தற்போது நிலையான நிலையை எட்டியுள்ளது.

எனவே, நாட்டின் அனைத்து பிரஜைகளும் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கைகளை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் சொத்து பொறுப்பு அறிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கிறார்கள்.

மேலும், வழக்குப் பொருட்கள் மற்றும் போதைப்பொருட்களை அகற்றுவது தொடர்பாக புதிய சட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version