Home இலங்கை அரசியல் அநுர அரசின் மீதான மக்களின் நம்பிக்கையீனம்! மொட்டுக் கட்சி விசனம்

அநுர அரசின் மீதான மக்களின் நம்பிக்கையீனம்! மொட்டுக் கட்சி விசனம்

0

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayaka) தலைமையிலான அரசு மக்கள் நம்பிக்கையை இழந்து
வருகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மொட்டுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான சஞ்சீவ
எதிரிமான்ன(Sanjeeva Edirimana) ஊடகங்களிடம் மேலும் குறிப்பிடுகையில்,

 

அரசு மீதான மக்களின் நம்பிக்கை

இந்த அரசு வழங்கிய வாக்குறுதிகளுக்கும், செய்கின்ற செயலுக்கும் இடையில் பெரிய
வித்தியாசங்கள் காணப்படுகின்றன. அதை மக்களும் தற்போது புரிந்துகொண்டுள்ளனர்.

தங்களது பாரம்பரியக் கட்சிகளையெல்லாம் விட்டுவிட்டுதான் இந்த அரசுக்கு வடக்கு,
கிழக்கு, மலையகம், தெற்கு என அனைத்துப் பகுதி மக்களும் ஆதரவு வழங்கினார்கள்.

ஆனால், தற்போது அரசு மீதான மக்களின் நம்பிக்கை குறைந்து வருவதை அவதானிக்க
முடிகின்றது.

2015ஆம் ஆண்டு பின்னடைவைச் சந்தித்து 2018ஆம் ஆண்டில் மீண்டெழுந்தது போல்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீண்டெழும்.

அதற்கேற்ற வகையில் கட்சி
கட்டியெழுப்பப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version