கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, தமிழ் தேசியம் சார்ந்த விடயம் ஒன்று சஜித் பிரமதாசவிடம் காணப்பட்டமையினாலேயே தமிழரசுக் கட்சி அவருக்கு ஆதரவளிக்க தீர்மானித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் உமாச்சந்திரா பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தனித்து தமிழரசுக் கட்சியை மட்டும் ஆராய்ந்து கொண்டிருக்காமல் தமிழ் தேசத்திற்கு என்ன தேவை இருக்கின்றது, அரசியலை எவ்வாறு முன்னெடுத்து செல்வது என்பது குறித்து நமது சமுதாயம் அக்கறை காட்ட வேண்டும் என தமிழரசுக் கட்சி வேட்பாளர் கிருஷ்ணவேணி சிறீதரன் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, மற்றைய கட்சிகளை விடவும் தமிழரசுக் கட்சி ஒரு பிரதான கட்சியாக தொடர்ந்தும் நிலைநிறுத்தப்பட்டு வருகின்றமையால் கட்சியின் ஒற்றுமை தொடர்பில் பலருக்கும் கேள்விகள் எழுந்து வருவதாக கிருஷ்ணவேணி சிறீதரன் குறிப்பிட்டார்.
எமது ஊடகத்தின் “நிலவரம்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒரு காரசாரமான உரையாடலில் ஈடுபட்ட போதே மேற்கண்ட இருவரும் இவ்வாறு தெரிவித்தனர்.
தொடர்ந்தும் அவர்கள் பேசிய விடயங்கள் கீழுள்ள காணொளியில்,
https://www.youtube.com/embed/svyADVQV5Zk