Home இலங்கை சமூகம் மனதை பதற வைக்கும் மரணங்கள்! அச்சத்தில் மக்கள் செய்யும் தவறான செயல்..

மனதை பதற வைக்கும் மரணங்கள்! அச்சத்தில் மக்கள் செய்யும் தவறான செயல்..

0

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த சூழ்நிலை காரணமாக மக்கள் அதிகளவில் பொருட்களை சேகரிக்கும் நிலையில் தேவையற்ற வகையில் அச்சம் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

தேவையற்ற முறையில் பொருட்களைப் பதுக்கி வைப்பதைத் தவிர்த்து, தமக்குத் தேவையான அளவுக்கு மாத்திரம் பொருட்களை கொள்வனவு செய்யுமாறு அந்த அதிகார சபை பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், சரியான நடைமுறையின் கீழ் மக்களுக்குத் தேவையான பொருட்களின் அளவை மட்டும் வழங்குமாறு சிறப்பு அங்காடிகள் மற்றும் வர்த்தகர்களிடம் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தச் சந்தர்ப்பத்தில், தற்போதுள்ள விலைகள் மற்றும் நியாயமான விலைகளின் கீழ் மட்டுமே பொருட்களை விற்பனை செய்து, அரசாங்கத்திற்கும் நாட்டுக்கும் ஆதரவு வழங்குமாறு வர்த்தக சமூகத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு செயற்படாத வர்த்தகர்களைக் கண்டறிய நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் என்றும், அவ்வாறான சிக்கல்கள் ஏதேனும் இருந்தால், நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையை நேரடியாக தொடர்பு கொண்டு தகவல் வழங்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், உதவிகள் சேகரிப்பதற்காக வீடுகளுக்கு வரும் பொறுப்பற்ற நபர்கள் குறித்தும் விழிப்புடன் இருக்குமாறும் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார செய்திகளை உள்ளடக்கிய லங்காசிறியின் விசேட செய்தி தொகுப்பு இதோ….

NO COMMENTS

Exit mobile version