நாடு முழுவதும் நிலவும் பேரிடர் சூழ்நிலை காரணமாக, தொடருந்து போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும், தொடருந்து பயணம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
பயணச் சிரமங்கள் காரணமாக, குறைந்த எண்ணிக்கையிலான பயணிகள் மட்டுமே தொடரந்து சீசன் டிக்கெட்டுகளை முன்கூட்டியே வாங்குவதுவும் கவனிக்கப்படுகிறது.
சீசன் டிக்கெட்
அந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, நவம்பர் 2025 மாதத்திற்கு செல்லுபடியாகும் மாதாந்திர மற்றும் காலாண்டு சீசன் டிக்கெட்டுகளை 2025.12.07 வரை பயன்படுத்த வசதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனினும் வாராந்திர சீசன் டிக்கெட்டுகளுக்கு இது செல்லுபடியாகாது என்று தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
