Home இலங்கை அரசியல் பலமடைகின்றது மொட்டுக் கட்சி : நாமல் கூறுகின்றார்

பலமடைகின்றது மொட்டுக் கட்சி : நாமல் கூறுகின்றார்

0

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கிராம மட்டங்களிலும் பலமடைந்து வருகின்றது.
மாகாண சபைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னரே தேர்தலில் போட்டியிடும்
விதம் பற்றி முடிவெடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

விசாரணை  கோரும் நாமல்  

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்குரிய வேட்புமனு வழங்கும்போது,
வேட்பாளர்கள் தொடர்பில் பொலிஸ் சான்றிதழ் பெறப்படும். போதைப்பொருள்
வியாபாரத்துடன் தொடர்புடையவர்களா என்பது பற்றி ஆராயப்படும்.

குற்றவாளிகள் நாட்டைவிட்டுத் தப்பியோடுவதற்குக் கடவுச்சீட்டு செய்து
கொடுக்கும் தரப்புகள் பற்றியும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version