Home இலங்கை அரசியல் ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி அநுர

ஐ.நா. பொதுச்சபையில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி அநுர

0

ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தொடரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க
உரையாற்றவுள்ளார் என்று அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா. பொதுச்சபையின் 80ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம்
திகதி ஆரம்பமாகின்றது.

ஐ.நா. பொதுச்சபை

இந்தக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி
அநுரகுமார விரைவில் அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளார்.

இந்தக் கூட்டத்
தொடரிலேயே அவர் உரையாற்றவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர
மோடி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், சீன ஜனாதிபதி ஜின் பிங் உள்ளிட்ட
உலகத் தலைவர்களுடனும் அநுர இருதரப்புப் பேச்சில் ஈடுபடவுள்ளார் என்றும்
தெரியவருகின்றது.

NO COMMENTS

Exit mobile version