புதிய பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான ஆணையை தமக்கு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆணை கோரும் ரணில்
ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் அருகில் கூடியிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், செப்டெம்பர் 21 ஆம் திகதி இந்த நாட்டின் அனைத்து மக்களின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்கான ஆணையை தமக்கு வழங்குமாறும் முழு நாட்டு மக்களையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நாட்டில் புதிய பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.