Home இலங்கை அரசியல் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து வவுனியாவில் துண்டுப்பிரசுரம் விநியோகம்

தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து வவுனியாவில் துண்டுப்பிரசுரம் விநியோகம்

0

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள ப.அரியநேத்திரனை
ஆதரித்து வவுனியா நகரில் துண்டுபிரசுரங்கள்  விநியோகிக்கப்பட்டுள்ளன.

தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பினரின் ஏற்ப்பாட்டில் வவுனியா பழைய பேருந்து நிலைய
பகுதியில் இன்றையதினம் (28) இவ்வாறு துண்டுபிரசுரம் விநியோகிக்கும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற
உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள்,
பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். 

NO COMMENTS

Exit mobile version