Home இலங்கை அரசியல் தமிழர் பகுதிகளில் முன்னிலையில் இருக்கும் ரணில் : வெளியாகியுள்ள அறிவிப்பு

தமிழர் பகுதிகளில் முன்னிலையில் இருக்கும் ரணில் : வெளியாகியுள்ள அறிவிப்பு

0

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் ரணில் விக்ரமசிங்க பதுளை, நுவரெலிய, மாத்தளை, யாழ்ப்பாணம், கண்டி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் முன்னிலையில் இருக்கிறார் என்று அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார். 

எஹலியகொட பிரதேசத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

பொருளாதார யுத்தத்திற்கு முடிவு

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

30 வருட யுத்தத்திற்கு முடிவு கட்டி தேசிய பாதுகாப்பை உறுதி செய்தவர் மகிந்த ராஜபக்ச.அதேபோன்று நாட்டிற்கு பொருளாதார பாதுகாப்பும் உணவு பாதுகாப்பும் சுகாதார பாதுகாப்பும் முக்கியமானது.

கேவிட் தொற்றினால் 16 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். ஏனைய நாடுகளில் பெருமளவானவர்கள் உயிரிழந்தனர். சுற்றுலாப் பயணிகள் அனைவரும் வெளியேறியிருந்தனர்.

வெளிநாட்டில் பணிபுரிவோருக்கு தாய்நாட்டுக்கு வர நேரிட்டது. வெளிநாட்டு கையிருப்பு வீழ்ச்சியடைந்தது. இதனால் எரிபொருள், கேஸ், கொள்வனவு செய்ய பணம் இருக்கவில்லை. மின் உற்பத்திக்கான நிலக்கரி கொண்டுவர முடியவில்லை.

பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது.

பொருளாதார யுத்தத்திற்கு முடிவு கட்டிய ரணில் விக்ரமசிங்கவிற்கு மக்கள் நன்றிக் கடன் செலுத்த வேண்டும்.

ரணில் விக்ரமசிங்க பதுளை, நுவரெலியா, மாத்தளை, யாழ்ப்பாணம், கண்டி, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களில் முன்னிலையில் இருக்கிறார்.

வெனிசூலாவில் ஒரு இராத்தல் பாணுக்காக சண்டை பிடிக்கின்றனர். பல நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளன. அனுபவமுள்ள தலைவர் கையில் ஆட்சியை ஒப்படைக்க வேண்டும். பரீட்சார்த்தம் செய்து பார்க்கும் காலம் இதுவல்ல  என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version